ஜேர்மனி பெண்ணுக்கு இந்தியாவில் நேர்ந்த துயர சம்பவம்
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஜேர்மானியர்கள்
ஜேர்மனை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவர், தனது நண்பரான Maximilian Qiyuanliu என்பவருடன், கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள மெசினா பல்கலைக்கழகத்தில் உடன் படித்த ஹைதராபாத்தை சேர்ந்த சரத் சந்திர சவுத்ரி, என்பவரின் அழைப்பின் பேரில் வந்து, அவரது வீட்டில் தங்கியிருந்து பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்துள்ளார்கள்.
ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் ஜேர்மனிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர்கள் அங்குள்ள காய்கறி சந்தையில் இருந்த போது, டாக்சி ஓட்டுநர் ஒருவர் நகரை சுற்றிக்காட்டுவதாக அவர்களை அழைத்துள்ளார்.
அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றுள்ளார்கள். அந்த காரில், அவர்களுடன் 9 முதல் 15 வயதுள்ள சிறுவர்கள் சிலரும் இருந்துள்ளார்கள்.
காரில் வைத்து வன்கொடுமை
பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் ஒன்றாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.
அதன் பின், மாமிடிப்பள்ளி நோக்கிச் சென்று சாலை அருகே தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி பெண்ணுடன் வந்த நண்பரையும், காரில் இருந்த மற்றவர்களையும் இறக்கி விட்டு, அந்த பகுதியில் செல்ஃபி எடுக்குமாறு கூறியுள்ளார்.
நாம் மேலும் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம் எனக்கூறி இளம்பெண்ணை அங்கிருந்து 100மீட்டர் தூரத்தில் உள்ள இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண் புகைப்படங்களை எடுத்து விட்டு மீண்டும் காருக்குள் வந்த போது, ஓட்டுநர் காரில் வைத்து வன்கொடுமை செய்துள்ளார்.
குற்றவாளி கைது
அதன் பின்னர் அவரது நண்பரை இறக்கி விட்ட அதே இடத்தில், ஜெர்மனி பெண்ணையும் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து, ஹைதராபாத் நண்பரின் உதவியுடன், பஹாடி ஷரீஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண் காட்டிய புகைப்படங்களை வைத்து, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 25 வயதான அப்துல் அஸ்லாம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |