சிறையில் கணவனை சந்திக்கச் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்: கணவன் மீது குற்றச்சாட்டு
ஜேர்மனியில், சிறையிலிருக்கும் தன் கணவனை சந்திக்கச் சென்ற ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த கணவன் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சிறையில் கணவனை சந்திக்கச் சென்ற பெண்
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்திலுள்ள Burg என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன் கணவரை சந்திக்கச் சென்றிருந்தார் 35 வயது பெண் ஒருவர்.
ஜேர்மன் சிறைகள் சிலவற்றில், கணவன் மனைவி சந்தித்துக்கொள்ள, நெருக்கமாக இருக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அந்தப் பெண் தன் கணவரை சந்தித்த நிலையில், பின்னர் அவர் உயிரிழந்துகிடந்துள்ளார்.
அந்த பெண்ணின் கணவரான 37 வயது நபர்தான் அந்தப் பெண்ணைக் கொலை செய்திருக்கவேண்டும் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இதற்கிடையில், அந்தப் பெண் உயிரிழந்தது எப்படி என்பதை அறிவதற்காக, அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |