இஸ்ரேல் பிரதமரை கைது செய்யமாட்டோம்: ஜேர்மனி அறிவிப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அவரைக் கைது செய்யமாட்டோம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்
காசாவில் ஹமாஸ் மீதான போரில் இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் மனித இனத்துக்கு எதிராக குற்றங்கள் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் கூறி, வியாழனன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் பிரதமரை கைது செய்யமாட்டோம்
ஆனால், இஸ்ரேல் பிரதமர் ஜேர்மனிக்கு பயணிக்கும் நிலையில், அவரைக் கைது செய்யமாட்டோம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் நாஸி வரலாறு காரணமாக, தங்களால் இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய இயலாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது குறித்துக் கூறும்போது, ஜேர்மனி தனது வரலாறு மற்றும் இஸ்ரேலுடனான உறவு காரணமாக கைது நடவடிக்கையை மேற்கொள்ளாது என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |