ஜேர்மனியில் இளைஞர் நல மையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு
ஜேர்மனியின் Stade நகரில் உள்ள ஒரு இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிசாரின் தகவலின்படி, தாக்குதல் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 29) மதியம் நடைபெற்றது. துப்பாக்கியுடன் வந்த ஒருவர், மையத்தில் இருந்த இளைஞர்களை குறிவைத்து சுட்டார்.
சம்பவம் நடந்த இடத்தில் உடனடியாக பொலிசார் மற்றும் அவசர மருத்துவ குழுவினர் விரைந்து சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரை கைது செய்துள்ளதாகவும், அவர் தனிப்பட்ட காரணங்களால் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Stade நகர மேயர், “இது மிகுந்த துயரமான சம்பவம். இளைஞர்களுக்கான பாதுகாப்பான இடத்தில் இப்படியான தாக்குதல் நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம், ஜேர்மனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்தில் புதிய சாதனை: GAGAN செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் Indigo விமானம் தரையிறக்கம்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |