ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை
ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான Alternative für Deutschland (AfD), தற்போதைய சட்டமன்ற காலத்தில் (2025-2029) அரசு நிதியிலிருந்து சுமார் 500 மில்லியன் யூரோவை பெறவுள்ளது.
AfD, 2025 தேர்தலில் சாதனை வெற்றி பெற்று, 152 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புந்தெஸ்டாக் (Bundestag) இல் மிகப்பெரிய வலதுசாரி குழுவாக உள்ளது.
இதன் மூலம், AfD உறுப்பினர்கள் மட்டும் ஆண்டுதோறும் 82 மில்லியன் யூரோ பெறுகின்றனர்.
மேலும், மாநில சட்டமன்றங்களில் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதால், கூடுதளாக கோடிக்கணக்கான நிதி AfD-க்கு செல்கிறது.

ஜேர்மனியில், ஒவ்வொரு வாக்குக்கும் கட்சிகள் அரசிடமிருந்து நிதி பெறுகின்றன. அதேபோல், மக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு அரசு 45 சென்ட் கூடுதலாக வழங்குகிறது.
இதன் அடிப்படையில், AfD 2025-இல் மட்டும் 12.78 மில்லியன் யூரோ பெற்றுள்ளது. ஒப்பிடுகையில், ஆட்சியில் உள்ள CDU கட்சி 54 மில்லியன் யூரோவை பெற்றுள்ளது.
ஆனால், AfD-க்கு வழங்கப்படும் இந்த நிதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், AfD பல மாநிலங்களில் “தீவிர வலதுசாரி கட்சி” என உளவுத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. சில நீதிமன்றங்கள், AfD ஜேர்மனியின் அரசியலமைப்பை பாதிக்க முயல்கிறது எனக் கண்டறிந்துள்ளன.
அரசியல் ஆய்வாளர் ஸ்டீஃபன் கைலிட்ஸ், “ஜேர்மன் அரசு, வலதுசாரி தீவிரவாதத்தை எதிர்க்க நிதியை செலவிடுகிறது. அதே நேரத்தில், அதே தீவிர வலதுசாரி கட்சிக்கு கோடிக்கணக்கான நிதி வழங்குகிறது. இது ஜனநாயகத்திற்கு முரண்பாடான நிலை” எனக் கூறியுள்ளார்.
AfD-க்கு வழங்கப்படும் அரசு நிதி, ஜேர்மனியின் ஜனநாயக அமைப்பில் பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany AfD public funding millions 2026, AfD receives government subsidies Bundestag, Germany far-right AfD taxpayer money news, AfD party funding controversy Germany 2026, Germany AfD parliament funding explained, AfD government support financial aid report, Germany AfD political funding debate 2026, AfD receives millions public funds Germany, Germany AfD taxpayer funding controversy, AfD party funding German democracy concerns