கரப்பான்பூச்சிகளை இரகசிய கண்காணிப்பு கருவிகளாக பயன்படுத்தும் ஜேர்மனி
ஜேர்மனி, உயிருள்ள கரப்பான் பூச்சிகளை இரகசிய கண்காணிப்பு கருவிகளாகப் பயன்படுத்துகிறது.
அறிவியல் கற்பனை கதைகளில் மட்டும் உலா வரும் கதையை ஜேர்மனி உண்மையாக்கியுள்ளது.
SWARM Biotactics என்ற தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், AI தொழில்நுட்பம் கொண்ட "பேக்க்பேக்" சாதனங்களை கரப்பான் பூச்சிகள் (cockroach) மீது பொருத்தி, அவற்றை உயிருடன் இயங்கும் உளவாளிகளாக மாற்றியுள்ளது.
இந்த ஸ்மார்ட் சாதனங்களில்:
- நுண்ணறிவு கமெராக்கள்,
- வாயு, வெப்பம், கதிர்வீச்சு கண்டறியும் சென்சார்கள்,
- மற்றும் நரம்பு தூண்டுதல் சாதனங்கள் உள்ளன. இவை, கரப்பான் பூச்சிகளை திசைமாற்றும் வகையில் வேலை செய்கின்றன.
AI மற்றும் Wireless கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் இணைந்த இந்த இயந்திர-உயிர் கலவைகள், சிக்கலான இடங்களில் நுழைந்து தகவல்களை சேகரிக்க பயன்படுகின்றன.
நகர்ப்புற போர் பகுதிகள், தீவிபத்து, கட்டட இடிபாடுகளில் உயிரிழப்புகளைக் கண்டுபிடிக்கும் பணிகள், போன்றவைகளில் இது பயன்படலாம்.
ஜேர்மனியின் பாதுகாப்புத் துறைக்காக, இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது, 13 மில்லியன் யூரோ நிதி கிடைத்துள்ளது. இது DARPA மாதிரியான பாதுகாப்பு ஆராய்ச்சி முன்னெடுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஏன் கரப்பான் பூச்சிகள்?
கரப்பான் பூச்சிகள் சிறியவை, சகிப்புத்தன்மை மிகுந்தவை, மின் சக்தி தேவையில்லாமல் இயங்கக்கூடியவை. மேலும், 3 கிராம் வரையிலான சாதனங்களை சுமக்கலாம். இவை இயற்கையாகவே உணர்ச்சி பொங்கும் உளவாளிகளாகவும் செயல்பட முடியும்.
இவை, எதிர்காலத்தில் போர்கள், தீயணைப்பு, மீட்புப்பணிகள், மற்றும் பெரும்பாலான உயர் அபாய சூழ்நிலை செயல்பாடுகள் ஆகியவற்றில் முக்கிய இடம் பிடிக்கவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany spy cockroach, AI-powered cockroach tech, SWARM Biotactics Germany, Cockroach surveillance AI, Bio-robotic spy insects, Cockroach with camera, Military insect surveillance, AI defense startups Germany, Cybernetic insects warfare, Cockroach spy drone tech