அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது: சீனப்பயணம் தொடர்பில் ஜேர்மன் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து
சமீபத்தில் சீனா சென்று திரும்பிய ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர், சீனப்பயணத்தின் சில பகுதிகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சீனா எதிரியாக மாறிவருகிறது
கடந்த வாரம் சீனா சென்று திரும்பிய ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
அப்போது, தனது சீனப்பயணம் குறித்து பேசிய அவர், தனது சீனப் பயணத்தின் சில பகுதிகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு வர்த்தக கூட்டாளராக, போட்டியாளராக இருப்பதைவிட, சீனா ஒரு எதிராளியாக மாறிவருகிறது என்றார் அவர்.
சீனா ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளர் என்பது உண்மைதான், ஆனால், அது ஜேர்மனியின் மிக முக்கியமான வர்த்தக கூட்டாளரும்தான் என்பது அதன் பொருள் அல்ல என்றார் அவர்.
எதனால் தான் அப்படி சீனாவை விமர்சித்தார் என்பதை Annalena Baerbock விளக்கவில்லை.
Suo Takekuma/Pool via REUTERS/