மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜேர்மன் தொழிலதிபர்
ஜேர்மனியின் மிகப்பெரிய பணக்காரரான டீட்டர் ஷ்வார்ஸ் (Dieter Schwarz) 86 வயதில் தனது லிட்ல் மற்றும் காஃப்லாண்ட் சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் மூலம் உலகளவில் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது, அவர் Google, Microsoft, Amazon போன்ற மிகப் பெரிய டெக் நிறுவனங்களுக்கு நேரடியாக சவால் விடுக்கிறார்.
ஷ்வார்ஸ் குழுமம் (Schwarz Group) தனது புதிய “Schwarz Digits Campus” தலைமையகத்தை Bad Friedrichshall நகரில் திறந்துள்ளது.
3,500 பணியாளர்களுக்கான வசதிகளுடன், குழந்தைகள் பராமரிப்பு மையம், உணவகம், உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகளும் கொண்ட இந்த வளாகம், சிலிகான் வாலி நிறுவனங்களின் தலைமையகங்களை ஒத்ததாக உள்ளது.

ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப சார்பிலிருந்து விடுவிப்பதே இந்த புதிய முயற்சியின் நோக்கம் ஆகும்.
Schwarz Digits தற்போது கிளவுட் சேவைகள், பாதுகாப்பு தீர்வுகள் போன்றவற்றை அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குகிறது. முக்கியமாக, 11 பில்லியன் யூரோ மதிப்பிலான டேட்டா சென்டர் பெர்லின் அருகே கட்டப்பட்டு வருகிறது. இது இந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீடாகும்.
டீட்டர் ஷ்வார்ஸ் தனது Schwarz Foundation மூலம் கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவோர் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். Heilbronn நகரம் தற்போது AI Innovation Park (IPAI) மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மையமாக மாறுகிறது.

அமெரிக்காவின் மாபெரும் டெக் நிறுவனங்கள் பல பில்லியன்களில் வருமானம் ஈட்டினாலும், Schwarz Digits தற்போது 2.2 பில்லியன் யூரோ மட்டுமே ஈட்டுகிறது.
இருந்தாலும், “We are here to stay” என்கிற Schwarz Digits நிர்வாகிகள், ஐரோப்பாவின் டிஜிட்டல் சுயாட்சியை மீண்டும் பெறும் முயற்சியில் உறுதியாக உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |