வழக்கில் கவனம் செலுத்தாததால் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி: பொலிசாருக்கு சிறை
ஜேர்மனியில், குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரின் வழக்கை பொலிசார் ஒருவர் பின் தொடராமல் விட்டதால், அந்தக் குற்றவாளி மீண்டும் ஒரு பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டார்.

அந்த குற்றவாளியை சரியாக கண்காணிக்காத பொலிசாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்ட குற்றவாளி
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், 2024ஆம் ஆண்டு ஆகத்து மாதம், ஆப்கன் நாட்டவரான 28 வயது நபர் ஒருவர் தனது காதலியைக் கத்தியால் தாக்கினார்.
அந்த வழக்கை விசாரிக்கவேண்டிய பொலிசார் அந்த வழக்கை முறையாக விசாரிக்கத் தவறிவிட்டார்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அதே ஆப்கன் நாட்டவர், இரண்டு வயதுக் குழந்தை ஒன்றையும் 41 வயது ஜேர்மானியர் ஒருவரையும் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார்.

ஆக, அந்த குற்றவாளி தன் காதலியைக் கத்தியால் தாக்கியபோதே அவரைப் பிடித்து விசாரித்து, அவரை கண்காணித்துவந்திருந்தால், அந்தக் குழந்தையும் ஜேர்மானியரும் கொல்லப்பட்டது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
எனவே, அந்த ஆப்கன் நாட்டவரை கண்காணிக்க, வழக்கை பின் தொடரத் தவறிய பொலிசாரான 29 வயது நபர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதியான Torsten Kemmerer, அந்த பொலிசார் கவனக்குறைவாகவும் சோம்பேறித்தனமாகவும் நடந்துகொண்டதாக விமர்சித்ததுடன், அவருக்கு ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
அதே நேரத்தில், அந்த பொலிசார் இதுவரை எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடாதவர் என்பதால், அவர் சிறை செல்வதை தவிர்க்க விரும்பினால், மூன்று ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த அமைப்பிற்கு 3,000 யூரோக்கள் நன்கொடை வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |