திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த நடிகர் ஆர்யா! ஈழப்பெண்ணின் புகார் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

actor court Arya germany girl
By Raju Jul 29, 2021 07:00 AM GMT
Report

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 71 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகார் தொடர்பாக, சிபிசிஐடி பொலிசாரின் விசாரணை முடியும் வரை அவரின் புதிய படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்று ஈழப்பெண் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க சிபிசிஐடி பொலிசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜேர்மனியை சேர்ந்த ஈழப்பெண் விட்ஜா தரப்பில் சிபிசிஐடியிடம் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பணத்தை திரும்ப கேட்டபோது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷாவின் பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று விட்ஜாவை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியுள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படங்கள் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடும்.

சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, அரசு தரப்பு வக்கீல், புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதை ஏற்ற நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதற்கிடையே விட்ஜாவின் புகாரை சில அழுத்தம் காரணமாக சிபிசிஐடி காவல்துறையினர் கிடப்பில் போட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாக அவரது வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US