ஆற்று நீரில் மோசமான கிருமிகள்: சுவிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்
பிரான்சிலுள்ள நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீர் சுவிஸ் ஆறுகளில் கலந்ததால், ஆற்று நீரில் நீந்துவது முதலான விடயங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
ஆற்று நீரில் கலந்த கழிவு நீர்
சுவிட்சர்லாந்தை ஒட்டியுள்ள பிரான்சின் Gaillard நகரில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீர் சுவிட்சர்லாந்திலுள்ள Arve மற்றும் Rhône நதிகளில் கலந்தது.
ஆகவே, ஜூன் மாதம் 12ஆம் திகதி, ஆற்று நீரில் நீந்துதல், துடுப்பு வலிக்கும் சிறுபடகு ஓட்டுதல் ஆகிய விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
நீரில் கிருமிகள்
ஆற்று நீரில் கழிவுநீர் கலந்ததால், மலத்தில் காணப்படும் ஈ.கோலை என்னும் மிக அதிக அளவில் இருந்தது பரிசோதனைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்தே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், இம்மாதம் 26ஆம் திகதி, அதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை, ஆற்று நீரில் பல மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் கிருமிகள் எந்த அளவுக்கு உள்ளன என்பது பரிசோதிக்கப்பட்டது.
புதனன்று பரிசோதனை முடிவுகள் வெளியாகின. பரிசோதனை முடிவுகளில், ஆற்று நீரில் ஈ.கோலை கிருமியின் அளவு குறைந்து, அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருப்பது தெரியவந்துள்ளது.
ஆகவே, ஆற்று நீரில் நீந்துவது முதலான விடயங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |