பீட்ஸாவில் கிருமிகள்... பிரபல நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
பிரபல நிறுவனத்தின் பீட்ஸாவில் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தால், அந்நிறுவனத்துக்கு எதிர்பாராத சிக்கல் உருவாகியுள்ளது.
பீட்ஸாவில் கிருமிகள்
கடந்த ஆண்டு, வடக்கு பிரான்சிலுள்ள Caudry என்னும் இடத்தில் அமைந்துள்ள நெஸ்ட்லேயின் Buitoni பீட்ஸா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பீட்ஸாவை சாப்பிட்ட ஏராளமான சிறுபிள்ளைகள் நோய்வாய்ப்பட்டதுடன், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வில், அந்தத் தொழிற்சாலையில் பீட்ஸா தயாரிக்கும் மாவில் ஈ. கோலை என்னும் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பீட்ஸா தயாரிக்கும் மாவில் கடந்த ஆண்டு ஈ. கோலை கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஒன்பது மாதங்களுக்கு அந்த தொழிற்சாலையில் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்
பின்னர், டிசம்பர் மாதம், நெஸ்ட்லே நிறுவனத்தின் பாதிக்கப்படாத ஒரு தொழிற்சாலையில் மீண்டும் பீட்ஸா தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனாலும், நிறுவனம் மூடப்பட்ட செய்தியாலும், பணவீக்கம் காரணமாகவும் பீட்ஸா விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது.
ஆகவே, தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் பணியாற்றுவோரின் வேலைகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என அநிறுவனம் அறிவித்துள்ளது, என்றாலும், அந்நிறுவனத்தின் Caudry கிளையின் எதிர்காலம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Credit: JeanLucIchard / Shutterstock.com