கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற இப்படியும் ஒரு வழி இருக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்!
வெளிநாட்டவர்கள், கனடாவில் முதலீடு செய்து நிரந்தர வாழிடம் பெறும் முறை குறித்த ஒரு செய்தி இது.
2022க்கும் 2024க்கும் இடையில், இந்த முதலீடு முறையில் புதிதாக நிரந்தர வாழிட விசா வழங்குவதை 50 சதவிகிதம் அதிகரிக்க கனடாவின் புலம்பெயர்தல் துறை திட்டமிட்டுள்ளது.
கனடா இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஜூலை 6ஆம் திகதி முதல், மீண்டும் எக்ஸ்பிரஸ் விசாக்களை வழங்கத் துவங்கியுள்ளது. கோவிட் காலகட்டத்தால் பெருமளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் தன் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்று வருகிறது கனடா. அதற்காக புலம்பெயர்தலுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது கனடா.
அவ்வகையில் தகுதியுடைய புலம்பெயர்வோரை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் கனடா, முதலீடு மூலம் நிரந்தர வாழிட உரிமம் பெறும் திட்டம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
முதலீடு மூலம் கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெறும் திட்டம் 2015ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
தற்போது, 2022க்கும் 2024க்கும் இடையில், இந்த முதலீடு முறையில் புதிதாக நிரந்தர வாழிட விசா வழங்குவதை 50 சதவிகிதம் அதிகரிக்க கனடாவின் புலம்பெயர்தல் துறை திட்டமிட்டுள்ளது.
யார் இந்த விசாவைப் பெற முடியும்?
இந்த முதலீடு மூலம் நிரந்தர வாழிட விசா பெறும் திட்டத்தின் கீழ், முதலீடு செய்யும் விண்ணப்பதாரர், அவரது கணவன் அல்லது மனைவி மற்றும் தகுதியுடய பிள்ளைகள் ஆகியோர் நிரந்தர வாழிட விசா பெறமுடியும்.
அத்துடன், அவர்கள் சில நிபந்தனைகளின் பேரில் கனேடிய குடியுரிமை பெறவும் வாய்ப்புள்ளது.
கீழ்க்கண்ட முதலீட்டுத் திட்டங்கள் மூலம் கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெறலாம்.
The Saskatchewan Entrepreneur Application Program, the Quebec Immigrant Investor Program, மற்றும் the Ontario Immigration Program (OINP).