Ceiling Fan வேகமாக சுற்ற இதை செய்தால் போதும்
Ceiling Fan எந்த உயரத்தில் சீரான காற்றைக் கொடுக்கிறது, அது உங்கள் அறையில் எந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.
தவறான இடத்தில் Ceiling Fan பொருத்தப்பட்டிருப்பதை கவனிக்காமல் நாம் தொழில்நுட்பக் கோளாறு என நினைப்பது தான் தவறு.
என்ன செய்ய வேண்டும்?
தரையில் இருந்து குறைந்தபட்சம் 7 அடி உயரம் மற்றும் சுவர்களில் இருந்து 18 அங்குல தூரத்தில் Fan இருக்க வேண்டும்.
உச்சவரம்பு உயரம் அதிகமாக இருந்தால், சிறந்த காற்றைப் பெறுவதற்கு தரையில் இருந்து 8-9 அடி உயரத்தில் Fan-யை பொருத்தலாம்.
அறையின் அளவிற்கு ஏற்ப சரியான அளவிலான Fan-யை பொருத்துவது அவசியம். மின்விசிறிகள் பொதுவாக 29-54 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கும்.
அவற்றில் 52 அங்குல மின்விசிறி மிகவும் பிரபலம். அளவு முக்கியம் ஒருவேளை அறையின் அளவு 75 சதுர அடி வரை இருந்தால், 29 - 36 இன்ச் அளவுள்ள மின் விசிறி போதுமானது.
அதேபோல் அறையின் அளவு 76-144 சதுர அடியாக இருந்தால், 36 முதல் 42 அங்குல மின் விசிறி நன்றாக இருக்கும்.
அதாவது சரியான அளவு மற்றும் உயரத்தில் விசிறியை பொருத்துவதன் மூலம் சீரான மற்றும் நிறைவான காற்றை நம்மால் பெற முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |