இலங்கை அணியில் இந்த பிரச்சனை உள்ளது! ஆஸ்திரேலியா தோல்விக்கு பின் பேசிய இலங்கை கேப்டன்
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான தோல்விக்கு பின் இலங்கை அணியின் கேப்டன் சில இடங்களில் சொதப்பிவிட்டோம் என்று கூறியுள்ளார்.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தின் நேற்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனக்கா கூறுகையில், மைதானம் மிகவும் நன்றாகவே இருந்தது. பேட்டிங்கில் எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது.
ஆனால், அதன் பின் வந்த வீரர்கள், அதாவது நடுவில் சில விக்கெட்டுகளை உடனே இழந்துவிட்டோம். ஆனால், அசலங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார்.
இருப்பினும் 15 முதல் 16 ஓவர் வரை ஒரு நல்ல பேட்டிங் ஆர்டர் நிற்க வேண்டும், அந்த இடம் தான் எங்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் 25 முதல் 30 ஓட்டங்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்று உணர்கிறேன்.
குறிப்பாக உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களான பின்ச் மற்றும் வார்னர் பேட்டிங் செய்யும் போது, அவர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பவர்பிளேயில் இதை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். நன்றாக பந்து வீச வேண்டும். ஆனால் இன்று அதை செய்ய முடியவில்லை. இனி வரும் அடுத்த போட்டிகளில் இதை சரி செய்து நன்றாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.