முகத்தை அசிங்கமாக காட்டும் மருக்களை நீக்க வேண்டுமா?
Beauty Tips
Skin Problem
By Kishanthini
பொதுவாக மருக்கள் முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம் சிலருக்கு மரு முகம் கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் உருவாகும். இவை எந்த ஒரு வலிகளையும் ஏற்படுத்தாது, என்றாலும் சரும அழகையே கெடுத்துவிடும்.
சிலர் இதை ஆரம்பத்தில் கண்டு கையால் பிடித்து இழுப்பார்கள் ஆனால் இது அவ்வளவு எளிதில் வரக்கூடியதல்ல. அதோடு அவை சருமத்தில் வேறுவிதமான பிரச்சனையை உண்டாக்க கூடும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் தற்போது மருவை நீக்க கூடிய ஒரு சில இயற்கை முறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- எலுமிச்சை சாறை கொண்டு மருக்களை எளிதில் நீங்க செய்யலாம். மருக்கள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறை தடவி 20 நிமிடங்கள் வரை நன்கு ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு வெண்ணீர் கொண்டு மருவுள்ள இடத்தை கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர மருக்கள் நீங்கும்.
- இஞ்சியின் மேல் தோலை சீவிவிட்டு, அதை மரு உள்ள இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். சற்று வலி எடுத்தாலும் தொடர்ந்து தேய்க்க வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் மருக்கள் அனைத்தும் மறைந்து போகும்.
- பூண்டை அரைத்து அதை மரு உள்ள இடங்களில் தடவி அரைமணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு அதை வெந்நீரில் வழிவி விட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது இப்படி செய்தால் சில நாட்களில் மருக்கள் நீங்கும்.
- சுண்ணாம்பை குழைத்து மரு இருக்கும் இடத்தில் தடவி வெற்றிலையை கொண்டு மருவாய் தேய்த்தால் மரு நீங்கும்.
- வெங்காயத்தை பனிரெண்டு மணி நேரம் உப்பில் ஊறவைத்து பிறகு அதை மைய அரைத்து மரு இருக்கும் இடத்தில் தடவி அரைமணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு வெந்நீர் கொண்டு கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் மருக்கள் நீங்கும்.
- வாழைப்பழ தோலை கொண்டு மருக்கள் உள்ள இடங்களில் நன்கு தேய்த்து வர மருக்கள் மறையும்.
- அத்திப்பழ தண்டின் சாறை மருக்கள் மீது தடவி வர மருக்கள் நீங்கும். இதனை ஒரே நாளில் பல முறை கூட செய்யலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US