தெருவோரத்தில் வியாபாரம் செய்ய ரூ.50,000 கடன் வேண்டுமா? இந்திய அரசின் திட்டம் இதோ
வாழ்வாதாரத்தை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்திய அரசு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
என்ன திட்டம்?
பிரதம மந்திரி தெருவோர வியாபாரி தற்சார்பு நிதியுதவித் திட்டத்தை ( PM SVANidhi ) இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது. தொழில் தொடங்குவதற்கான மூலதன நிதியுதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டமானது கடந்த 2020 -ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வணிகர்கள் தங்களது தொழிலை எளிதாக தொடங்க முடியும்.
என்ன தகுதி வேண்டும்?
இந்தத் திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரம் செய்கின்ற எந்தவொரு வியாபாரியும் கடன் பெற முடியும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வழங்குகின்ற தெருவோர வியாபாரி என்ற அடையாள அட்டை, அங்கீகாரச் சான்று பெற்றும் அடையாள அட்டை கிடைக்கப் பெறாத வியாபாரிகள் அடங்குவர்.
மேலும், கணக்கெடுப்பு பணியின்போது விடுபட்ட போன தெருவோர வியாபாரி உள்ளாட்சி விற்பனைக் குழுவிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைக் கடிதத்தின் மூலம் கடனை பெறலாம்.
குறிப்பாக நகர்ப்புறம் அல்லது கிராமப்புறத்தைச் சேர்ந்த வியாபாரிகள் இதன் மூலம் பயன் பெற முடியும்.
கடன் எவ்வளவு?
இந்த திட்டத்தின் மூலம் ஒரு வியாபாரி ரூ.50 ஆயிரம் வரையில் கடன் பெற முடியும். முதலில் ரூ.10,000 கடன் வழங்கப்படும். அதனை சரியாக செலுத்தினால் இரண்டாவது முறையாக ரூ.20,000 கடன் வழங்கப்படும்.
அதனையும் சரியாக செலுத்தினால் மூன்றாவது முறையாக ரூ.50,000 வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். முக்கியமாக இந்த கடனை பெறுவதற்கு எந்தவொரு உத்தரவாதமும் வழங்க வேண்டியதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |