ரயில் டிக்கெட்டுகளில் 20 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.., இந்திய ரயில்வே அறிவிப்பு
இந்திய ரயில்வேயானது சுற்றுப் பயண டிக்கெட் முன்பதிவிற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
வெளியான தள்ளுபடி
இந்திய ரயில்வே பயணிகளுக்கு பெரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் திகதி அன்று 'Round Trip Package’ என்று பெயரிடப்பட்ட திட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, பயணி ஒரு சுற்றுப் பயண டிக்கெட்டை (round trip ticket) முன்பதிவு செய்தால் அவருக்கு 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இந்த நடவடிக்கையானது பண்டிகைக் காலத்தில் ரயில்களில் அதிக நெரிசல் மற்றும் டிக்கெட்டுகளுக்கான நெரிசலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
பயணி எடுக்கும் இரண்டு டிக்கெட்டுகளிலும் பயணியின் பெயர் ஒரே மாதிரியாகவும், ஒரே வகுப்பைச் சேர்ந்ததாகவும் இருக்க வேண்டும். இந்த புதிய வசதியை ஒக்டோபர் 13 முதல் டிசம்பர் 1 வரை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக இது இருபுறமும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த டிக்கெட்டிற்கு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும், சலுகையும் இருக்காது.
இந்தியாவின் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகுப்புகளிலும் இந்த வசதியை நீங்கள் பெறலாம். இரண்டு டிக்கெட்டுகளையும் ஒரே நேரத்தில் ஒரே ஊடகம் மூலம் முன்பதிவு செய்வது அவசியம். இந்த தள்ளுபடியை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |