ஒரு கோல் கூட இல்லை: சாம்பியன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கானா..FIFA உலகக்கிண்ணத்தில் மிரட்டல்
இங்கிலாந்து மற்றும் கானா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
ஒரு கோல் கூட இல்லை
FIFA உலகக்கிண்ணத்தின் குரூப் L போட்டியில் சாம்பியன் அணியான இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் மோதின.

கடுமையாக தடுப்பாட்டம் ஆடிய கானா அணி, கடைசி வரை இங்கிலாந்தை ஒரு கோல் கூட அடிக்கவிடவில்லை. இதனால் போட்டி 0-0 என டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. 78 சதவீதம் பந்தை தங்களிடம் வைத்திருந்தது.
619 முறை பாஸ்
இங்கிலாந்து 19 ஷாட்ஸ் அடித்த நிலையில், கானா அணி 2 ஷாட்ஸ் மட்டுமே அடித்திருந்தது. 619 முறை இங்கிலாந்து பந்தை பாஸ் செய்திருந்தது; கானா அணி 168 முறை மட்டுமே பாஸ் செய்தது.
இரு அணிகளும் தலா 2 முறை ஆஃப்சைடு கோல் அடித்தன. 2 கார்னர் கிக் வாய்ப்புகளை கானா அணி தவறவிட்ட நிலையில், இங்கிலாந்து 9 கார்னர் கிக் வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறவிட்டது.
நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) இருந்தும், இங்கிலாந்து அணியால் கோல் அடிக்க முடியாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |