துருக்கி நிலநடுக்கத்தில் மீட்கப்பட்ட பிரபல கால்பந்து வீரரின் உடல்! உறுதிப்படுத்தப்பட்ட தகவல்..சோகத்தை வெளிப்படுத்திய கிளப்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது காணாமல் போன கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாயமான கானா வீரர்
மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்ததுடன், பெருமளவில் சேதமடைந்துள்ளன.
கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, கானாவின் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல் வெளியானது.
ஆனால் அவர் இடிபாடுகளுக்கு சிக்கி உயிரிழந்துவிட்டதாக செய்தி பரவியது. எனினும் அந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
கண்டுபிடிக்கப்பட்ட உடல்
இந்த நிலையில் Antakya-வில் உள்ள கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கிறிஸ்டியன் அட்சுவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கியின் மாநில செய்தி ஊடகமான TRT ஹபேர் தெரிவித்துள்ளது.
@Ian MacNicol/Getty Images
இதுதொடர்பாக அவர் விளையாடிய கிளப் அணியான Hatayspor வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அழகான மனிதரே, உங்களுக்கு அமைதி உண்டாகட்டும். எங்கள் சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவரது உடல் கானாவுக்கு அனுப்பப்படும்' என கூறியுள்ளது.
@Getty Images
@Colin Lane