கல்லூரி மேடையில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம்., மாணவனை வெளியேற சொன்ன பேராசியர்கள் மீது நடவடிக்கை
கல்லூரி விழாவில் மாணவர் ஒருவர் மேடையில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டதால், அவரை ஆசிரியர்கள் இருவர் வெளியேற சொன்ன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஏபிஇஎஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கல்லூரியில் சமீபத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.
ஒரு மாணவர் மேடையில் சென்று தனது நடிப்பைத் தொடங்கியபோது, சில சக மாணவர்கள் கீழே இருந்து ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சலிட்டனர்.
மேடையில் இருந்த மாணவனும் ஜெய் ஸ்ரீராம் நண்பர்களே என்று மைக்கில் பதிலளித்தார். உடனே, ஒரு பேராசிரியர் அவரை மேடையில் இருந்து கீழே இறங்கும்படி கட்டளையிட்டார்.
இது ஒரு கலாச்சார நிகழ்வு என்றும், இதுபோன்ற கோஷங்கள் போடக்கூடாது என்றும் பேராசிரியர் கடிந்து கொண்டார். இந்த வீடியோ வைரலானதால், காசியாபாத் பொலிஸ் கமிஷனர் இதற்கு பதிலளித்துள்ளார்.
A student from ABES college (Ghaziabad) was expelled from stage by a professor for saying Jai Shri Ram before performance; Video goes viral pic.twitter.com/TtC3q3N4eS
— Megh Updates ?™ (@MeghUpdates) October 20, 2023
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட மாணவியை மேடையில் இருந்து இறங்கச் சொன்ன பேராசிரியர் மற்றும் மற்றொரு பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ரூ.14 ஆயிரம் ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்திற்கு சொந்தமாக வாய்ப்பு.. அமேசான் விற்பனையில் பெரும் தள்ளுபடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |