தித்திக்கும் சுவையில் நெய் அப்பம்.., இலகுவாக எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நெய் அப்பத்தை விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் நெய் அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை அரிசி- 1 கப்
- மைதா- ¼ கப்
- வாழைப்பழம்- 1
- வெல்லம்- ¾ கப்
- உப்பு- 1
- சிட்டிகை ஏலக்காய்- 4
- தேங்காய்- அரை மூடி
- நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை 2 முறை நன்கு கழுவி ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, மைதா, வழைப்பழம், ஏலக்காய், துருவிய தேங்காய் மற்றும் வெல்ல பாகை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து காய்ந்ததும் அதில் அரைத்த மாவை ஊற்றவும்.
இறுதியாக அப்பம் நன்கு வெந்து வந்ததும் எடுத்தால் சுவையான நெய் அப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |