காபியுடன் சிறிது நெய் சேர்த்து தினமும் காலையில் குடிச்சு பாருங்க.. இந்த நன்மைகள் எல்லாம் உங்களை வந்து சேரும்!
Weight loss
Acidity
Energy
By Kishanthini
பண்டைய காலங்களிலிருந்து நமது உணவுகளில் நெய் என்பது பயன்படுத்தப்பட்டு வரும் அற்புத பொருளாக உள்ளது.
நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் விட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கின்றன.ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை மூளை, இதயம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
இதனை 1 ஸ்பூன் தினமும் காலையில் காபியுடன் கலந்து குடிப்பதனால் உடலுக்கு நல்ல பயனை வழங்குகின்றது. அந்தவகையில் தற்போது அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நெய் காபியை தயாரிக்கும் முறை
- ஒரு டம்ளரில் காபியைத் தயாரித்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
- பின் தயாரித்த காபியின் அளவிற்கு ஏற்ப அதில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொண்டால், நெய் காபி தயார்.
நன்மைகள்
- காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபியைக் குடிக்கும் பலருக்கு அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் காபியுடன் சிறிது நெய் சேர்த்துக் கொள்வதால், அசிடிட்டி குறைவதோடு, உட்காயங்களும் குறையும்.
- காலையில் ஒரு கப் நெய் கலந்த காபியைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் வேகம் அதிகரிக்கப்படும்.
- காபியுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால், அது மனநிலையை நிலையாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.
- நெய் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் நெய்யில் பால் திடப்பொருட்கள் மற்றும் புரோட்டீன்கள் இல்லை. மேலும் வெண்ணெயை விட நெய் வேகமாக வயிற்றில் செரிமானமாகும்.
- காபி உடலின் ஆற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும். அந்த காபியுடன் நெய்யை சேர்த்துக் குடித்தால், உடலின் ஆற்றல் இரட்டிப்பாக அதிகரிக்கும். இது உடலின் ஆற்றலை அதிகரிக்கத் தூண்டக்கூடியவை.
குறிப்பு
நெய் காபியில் இருந்து முழுமையான சத்துக்களையும், நன்மைகளையும் பெற நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US