முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் நெய்: இப்படி யூஸ் பண்ணுங்க
பொதுவாக முடி உதிர்வு, சரியான ஊட்டச்சத்து இல்லாததால் மற்றும் வெளிப்புற மாசுபாட்டின் காரணமாகவும் தான் ஏற்படுகிறது.
இதனை தடுப்பதற்கு இயற்கை முறையில் பல ஆரோக்கியமான பொருட்கள் இருக்கிறது. அந்த வகையில் நெய்யும் முடி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
நெய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கூந்தலின் வளர்ச்சி மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு நெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நெய் ஹேர் மாஸ்க்
நெய்யை எடுத்து உச்சந்தலை முதல் கூந்தலிலும் நன்றாக தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும்.
இப்படி பயன்படுத்தினால் நுனி முடி பிளவுப்படும் பிரச்சினை தீர்க்கும், வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும் மற்றும் முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
நெய்யுடன் வேப்பம்பூ
முதல் நாள் இரவில் ஒரு கிண்ணத்தில் நெய், வேப்பம்பூ, மற்றும் தேன் சேர்த்து கலந்து வைத்து மறுநாள் காலையில் அதை மிதமாக சூடுபடுத்தி கூந்தலில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும்.
இந்த ஹேர் மாஸ்க் பொடுகு பிரச்சினையை நீக்கும், உடல் சூட்டை குறைக்கும், இளநரை உண்டாகாமல் தடுக்கும்.
நெய்யுடன் தேங்காய் எண்ணெய்
நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து மிதமாக சூடு செய்து தலையில் சேர்த்து மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.
இதை பயன்படுத்துவதன் மூலம் பொடுகை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
நெய்யுடன் லெமன் சாறு
நெய்யுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மிதமாக சூடு செய்து தலையில் மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும்.
இதை பயன்படுவதால் மூலம் முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
நெய்யுடன் தேன்
நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.
இதனால் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கவும், தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |