நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? குறையுமா? இதான் உண்மை
உடல் பருமனாக இருந்தால் அல்லது எடை குறைப்பதற்கான முயற்சியில் இருந்தால், உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என பலரும் கருத்து தெரிவிப்பார்கள்.
ஆனால், உண்மையாகவே நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா? உண்மை தான் என்ன?
எடையைக் குறைக்க நெய் உதவியாக இருக்கிறது. நெய் என்பது கொழுப்பு சத்தின் ஆரோக்கியமான மூலமாக இருக்கிறது. எனவே நாம் எடையிழக்க வேண்டுமென்று அதை உணவில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை.
உடல் எடையை குறைக்க நெய்யை எப்படி பயன்படுத்தலாம்?
ஒரு ஸ்பூன் நெய் தினமும் எடுத்துக்கொண்டால் எடை குறைப்புக்கு இது உதவியாக இருக்கும்.
அதிகபட்சம் தினமும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
அதை விட அதிகமாக எடுக்க வேண்டாம். ஏனெனில் அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது தான் எடை அதிகரிக்கும் பிரச்சனை ஏற்படும்.