தீபாவளி ஸ்பெஷல்: வாயில் வைத்ததும் கரையும் நெய் மைசூர் பாக்.., எப்படி செய்வது?
பொதுவாகவே அனைவருக்கும் மிகவம் பிடித்த ஒரு தின்பண்டமாக இருப்பது நெய் மைசூர் பாக்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் வாயில் வைத்ததும் கரையும் நெய் மைசூர் பாக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு- ¼ கப்
- பால் பவுடர்- ¾ கப்
- எண்ணெய்- ½ கப்
- நெய்- 1 கப்
- சர்க்கரை- 1½ கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து உருக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலை அடுப்பில் வைத்து கடலை மாவு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வறுத்து சலித்த கடலை மாவு, பால் பவுடர் சேர்த்து அதில் நெய் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும்வரை பாகு காய்ச்சவும்.
பின்னர் அதில் கரைத்து வைத்த மாவை சேர்த்து அவ்வப்போது நெய் சேர்த்து ஒட்டாமல் கெட்டியாகி வரும்வரை கிளறவும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய் தடவி இதனை சேர்த்து சூடு ஆறியதும் வெட்டினால் சுவையான நெய் மைசூர் பாக் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |