நாவூறும் சுவையில் பாய் வீட்டு நெய்ச்சோறு.., எப்படி செய்வது?
பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.
நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பாய் வீட்டு ஸ்டைல் நெய்ச்சோறு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- நெய் - 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- பிரியாணி இலை
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 3
- ஏலக்காய்- 2
- அன்னாசிப்பூ- 1
- ஜாவித்ரி- 2
- கல்பாசி- 2
- வெங்காயம் - 2
- முந்திரி - 10
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- புதினா இலை
- கொத்தமல்லி இலை
- உப்பு - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- தண்ணீர் - 1¾ கப்
- பாஸ்மதி - 1 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய், தேங்காய் எண்ணெய், பட்டை , கிராம்பு, அன்னாசிபூ, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, கல்பாசி சேர்த்து கிளற வேண்டும்.
பின் இதில் வெங்காயம், முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் இதில் புதினா, கொத்தமல்லி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
அடுத்து இதில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் 20 நிமிடம் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.
இதற்கடுத்து தண்ணீர் முழுவதையும் அரிசி உறியும் போது மூடி போட்டு 20 நிமிடம் தம் போட வேண்டும்.
இறுதியாக இதன் மேல் லேசாக நெய், எண்ணெய்யில் பொரித்த வெங்காயம் சேர்த்து கிளறினால் சுவையான நெய்ச்சோறு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |