பிரித்தானிய மகாராணியார் ஓய்வெடுக்கும் தனிப்பட்ட இடத்தில் பயங்கர பாலியல் குற்றவாளி... வெளியான அதிரவைக்கும் புகைப்படம்
பிரித்தானிய மகாராணியார் ஓய்வெடுக்கும் தனிப்பட்ட இடம் ஒன்றில் பயங்கர பாலியல் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய மகாராணியாருக்கு சொந்தமான பால்மோரல் அரணமனையில், அவர் ஓய்வெடுக்கும் அதே இடத்தில் பிரபல அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)ம் அவரது ’நெருங்கிய’ கூட்டாளியான Ghislaine Maxwell என்ற பிரித்தானிய பெண்ணும் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பருவமடையாத இளம்பெண்கள் முதல் ஏராளம் பெண்களை, வேலை தருவதாக அழைத்து பாலியல் தொழிலாளிகளாக்கி, பல செல்வந்தர்களுக்கு விருந்தாக்கியவர் அமெரிக்க கோடீஸ்வரரான எப்ஸ்டீன். அந்த பெண்களை ஆசை காட்டி எப்ஸ்டீனிடம் கொண்டு சேர்க்க உதவியவர் Ghislaine.
Virginia Giuffre என்ற இளம்பெண், எப்ஸ்டீன் மற்றும் Ghislaine ஆகியோர், தன்னை ஏமாற்றி பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ முதல், பலருக்கு விருந்தாக்கியதாகவும், தன்னைப்போல் பல இளம்பெண்கள் சீரழிக்கப்பட்டதாகவும் வெளிப்படையாக குற்றம் சாட்ட, உலகமே அதிர்ந்தது.
அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன் சிறையில் மர்மமாக இறந்து கிடந்தார்.
தற்போது, அவரது கூட்டாளி என அழைக்கப்படும் Ghislaine மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின்போதுதான், எப்ஸ்டீன் மற்றும் Ghislaine ஆகிய இருவரும், பிரித்தானிய மகாராணியாருக்கு சொந்தமான பால்மோரல் அரண்மனையில், மகாராணியாரும் அவரது கணவரும் அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்திருக்கும் அமர்ந்திருக்கும் புகைப்படம் நீதிமன்றத்தில் காட்டப்பட்டுள்ளது.
எப்ஸ்டீனுக்கும் பிரித்தானிய மகாராணியாரின் மகனான இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் இடையில் நட்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர், எப்ஸ்டீனையும் Ghislaineஐயும் பால்மோரல் அரண்மனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022