நண்பர் ட்ரம்பிடம் உதவி கோரும் குற்றவாளியின் காதலி; வெளியான ரகசிய தகவலால் பரபரப்பு
சிறையிலடைக்கப்பட்டுள்ள மோசமான குற்றவாளி ஒருவரின் கூட்டாளியும் காதலியுமான ஒரு பெண், தனது தண்டனையைக் குறைக்க உதவுமாறு தன் நண்பரான ட்ரம்பிடம் கெஞ்சியுள்ளதாக ரகசிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசமான குற்றத்துக்காக சிறையிலிருக்கும் பெண் ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.

எப்ஸ்டீனுடைய காதலி, கூட்டாளி கிஸ்லேய்ன் மேக்ஸ்வெல். இந்த கிஸ்லேய்ன், வேலைக்கு எடுப்பதாகக் கூறி சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, தன் காதலரான எப்ஸ்டீனுடன் இணைந்து அவர்களை துஷ்பிரயோகம் செய்து பலருக்கும் விருந்தாக்க உதவிய பெண்ணாவார்.
அத்துடன், இந்த கிஸ்லேய்ன் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் நண்பரும் ஆவார்.
இன்று எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததற்காக ராஜகுடும்பத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு பல தொல்லைகளை அனுபவித்துவருகிறார் பிரித்தானிய இளவரசரான ஆண்ட்ரூ.
ஆனால், அதே எப்ஸ்டீன் மற்றும் அவரது காதலியான கிஸ்லேய்னுடன் தொடர்பிலிருந்த ட்ரம்ப் இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கிறார்.

அந்த நட்பை உறுதி செய்யும் வகையில்தான், தனது தண்டனையைக் குறைக்க உதவுமாறு தற்போது ட்ரம்பிடம் ரகசிய கோரிக்கை வைத்துள்ளார் கிஸ்லேய்ன்!
வெளியான ரகசிய தகவல்
இந்நிலையில், கிஸ்லேய்ன் ட்ரம்பிடம் உதவி கோரியுள்ள விடயத்தை ஒருவர் நீதித்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவுக்கு ரகசியமாக தெரியப்படுத்திவிட்டார்.
அத்துடன், சிறையில் கிஸ்லேய்னுக்கு சிறப்பு சலுகைகள் கொடுக்கப்படும் விடயத்தையும் அவர் வெளிக்கொணர்ந்துள்ளார்.

கிஸ்லேய்ன் ட்ரம்பிடம் முறைப்படி உதவி கோர இருப்பது தொடர்பில் அவர் அனுப்பிய மின்னஞ்சல்களை அவரது சட்டத்தரணியும் ஊடகம் ஒன்றிற்கு காட்டியுள்ளார்.
இந்த ரகசிய தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நீதித்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழு உறுப்பினரான ஜேமி ரஸ்கின் (Jamie Raskin) என்பவர், அது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கிஸ்லேய்ன் விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்றும் அவர் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.
ஏராளம் சிறுபிள்ளைகள் வாழ்வை நாசமாக்கிய அந்தப் பெண்ணுக்கு மன்னிப்பு, தண்டனைக் குறைப்பு என எந்த சலுகையும் நீங்கள் வழங்கக்கூடாது என ஜேமி ட்ரம்புக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உங்கள் நிர்வாக ஊழியர்கள் கிஸ்லேய்னுக்கு எடுபிடி வேலைகள் எதையும் செய்யக்கூடாது என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார் ஜேமி.
ஆக, மோசமான பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ட்ரம்ப் கூறிவரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல், அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |