நடு ராத்திரியில் பேய் வேட்டைக்கு வந்து பொலிஸிடம் சிக்கிய 'கோஸ்ட ஹன்டர்ஸ்'; வேல்ஸில் நடந்த வேடிக்கை சம்பவம்!
ஆவிகளைத் தேடி 60 மைல் தூரம் பயணித்த 'பேய் வேட்டைக்காரர்கள்' குழுவுக்கு பூட்டுதல் விதிகளை மீறியதற்காக பொலிஸாரால் அபராதம் விதிக்கப்பட்டது.
மார்ச் 5-ஆம் திகதி நள்ளிரவில் Swansea பகுதியில் 4 பேர் கொண்ட ஒரு குழு காரில் அமர்ந்து கொண்டிருந்ததை 'Team3TownHill' பொலிஸார் கவனித்துள்ளனர்.
அவர்களை விசாரித்ததில், அவர்கள் 'Ghost Hunters' என்றும், அவர்கள் பேய் வேட்டைக்கு பெயர்போன Swansea Castle பகுதிக்கு Cwmbran நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 60 மைல் தூரத்துக்கு மேல் பயணித்து வந்ததும் தெரியவந்தது.
வேல்ஸ் பகுதியில் கடந்த டிசம்பர் 20-ஆம் திகதி முதல் 4-ஆம் நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது. மேலும், அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் விதிமுறைகளை மீறியதாக ஒவ்வொருவர் மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டுனருக்கு இன்சூரன்ஸ் இல்லை, தற்காலிக ஓட்டுநர் உரிமம் மட்டுமே இருந்தது என்பதும் தெரியவந்தது.
இதனால், பொலிஸார் அந்த காரை பறிமுதல் செய்து, அவர்களை மட்டும் திருப்பி அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை Swansea பொலிஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேய் வேட்டைக்கு வந்து இப்படி பொலிஸிடம் சிக்கி வீடு திரும்பிய சம்பவம் வேடிக்கையாக மாறியுள்ளது.
#team3townhill have stopped a car in #Mumbles this morning with four people from #Cwmbran who had come to ghost hunt and view castles ??♂️ Covid fixed penalties issued. Also driver had no insurance and a provisional licence. Car seized and long walk home! ^5701 ^6164 @DriveInsured pic.twitter.com/JPQpTjQYDD
— South Wales Police Swansea (@SWPSwansea) March 5, 2021