மன்னர் சார்லஸின் முடிசூட்டுவிழாவில் நுழைந்த பேய்! பரபரப்பை ஏற்படுத்திவரும் வீடியோ
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பயங்கர உருவம் தோன்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மன்னர் முடிசூட்டு விழா
ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு, 70 ஆண்டுகள் கழித்து அவரது மகன் சார்லஸ் சனிக்கிழமை (மே 6) பிரித்தானியாவின் மன்னராக முடிசூட்டப்பட்டார். இந்த 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் இந்த முடிசூட்டு விழா நிகழ்ச்சி உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அதனைப் பார்த்த நெட்டிசன்கள் விழாவின் போது ஒரு பயங்கரமான உருவத்தைக் கண்டுள்ளனர் மற்றும் அதன் வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
கருப்பு உருவம்
அந்த வீடியோவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் உள்ளே முடிசூட்டு விழா நடப்பது தெரிகிறது. அப்போது, ஒரு சம்பிரதாய அணிவகுப்புக்குப் பிறகு, ஒரு முகமூடி அணிந்த, கருப்பு ஆடை அணிந்த ஒரு உருவம் அரிவாளைப் போன்ற ஒன்றைச் சுமந்துகொண்டு அந்த அவைக்கு வெளியே உள்ள நடைபாதையில் நடந்து செல்வதைக் காண முடிந்தது.
அந்த உருவம் மதகுருமார்களில் ஒருவராக இருப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன, ஆனால் நெட்டிசன்கள் சதி கோட்பாடுகளை விவரிக்க தொடங்கினர். கிரிம் ரீப்பர் என்று அழைக்கப்படும் இந்த உருவம் மரணத்தின் முன்னோடி (மரணத்தை கணிக்கும் உருவம்) என்று பலர் கூறிவருகின்றனர்.
'Grim Reaper' at Westminster Abbey Credit: Twitter/realjoegreeeen
a mysterious figure appeared during the coronation ceremony in the United Kingdom, where he appeared wearing a black robe and holding a machete as if he was a "grim reaper" !!#Coronation #QueenCharlotte pic.twitter.com/AuTXwgYvct
— Mystery Empire (@mysteryempiire) May 6, 2023