பிஃபா தலைவராக மீண்டும் தெரிவாகும் சுவிஸ் நபர்!
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக சுவிட்சர்லந்தின் கியானி இன்பாண்டினோ மீண்டும் தெரிவு செய்யப்பட உள்ளார்.
பிஃபா தலைவர்
கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து பிஃபா-வின் (சர்வதேச கால்பந்து சம்மேளனம்) தலைவராக கியானி இன்பாண்டினோ பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதுவரை கியானியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
இதனால் மூன்றாவது முறையாக கியானி பிஃபா-வின் தலைவராக தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மார்ச் 16ஆம் திகதி ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் 73வது FIFA காங்கிரஸ் தேர்தலில், இன்பாண்டினோ மட்டுமே வேட்பாளரகாக இருப்பார். வேறு எந்த வேட்புமனுவும் சமர்ப்பிக்கப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜேர்மன் கால்பந்து கூட்டமைப்பு இன்பாண்டினோவின் மறுதேர்தலை ஆதரிக்கப் போவதில்லை எனக் கூறியது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இன்பாண்டினோவின் கிளப் கால்பந்து சீர்திருத்தங்களுக்கான பல திட்டங்கள் மந்தமான வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
@AFP