கட்டிட வேலை நடக்கும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத பாம்பு: அதிர்ச்சியடைந்த மக்கள்
ஸ்காட்லாந்தில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் இராட்சத பாம்பு ஒன்றைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஸ்காட்லாந்தின் Renfrewshire என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 14 அடி நீளம் கொண்ட அந்த பாம்பைக் கண்ட மக்கள் உடனே பொலிசாருக்கு தகவலளித்தனர்.
முதலில் அந்த பாம்பு உயிருடன் இல்லை என கருதப்பட்டது. பின்னர், அந்த பாம்பு உயிருடன் இருப்பதாகவும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் மற்றொரு இறந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அது 6 அடி நீளம் இருந்தது.
ஒரே இடத்தில் இரண்டு பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, மேலும் பாம்புகள் நடமாடலாம் என கருதப்படுவதால் மக்கள் சற்று பயமடைந்துள்ளனர்.


