பிரித்தானியாவில் பலத்த காற்றில் சாய்ந்த பிரம்மாண்ட படகு: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்...
ஸ்கொட்லாந்திலுள்ள படகுத்துறை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட படகு ஒன்று சாய்ந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த காற்றில் சாய்ந்த பிரம்மாண்ட படகு
இன்று காலை 8.35 மணியளவில் பலத்த காற்று வீசியதால், Leith என்னுமிடத்திலுள்ள படகுத்துறை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரிய படகொன்று 45 டிகிரி சாய்ந்துள்ளது.
திடீரென படகு சாய்ந்ததில், அதில் இருந்த ஊழியர்க்ள் 10 பேர் காயமடைந்துள்ளார்கள், இரண்டு பேரைக் காணாததால் பதற்றம் உருவாகியுள்ளது.

The Sun
யாருடைய படகு தெரியுமா?
RV Petrel என்னும் அந்த ஆராய்ச்சிப் படகு, மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான Paul Allen என்பவருக்கு சொந்தமானதாகும்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்புப்பணியில் ஐந்து ஆம்புலன்ஸ்கள், ஹெலிகொப்டர் ஒன்று, மூன்று அவசர உதவிக் குழுக்கள், அவரசர ஆபரேஷன் குழு ஒன்று, மூன்று துணை மருத்துவக் குழுக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வாகனம் ஒன்று ஆகியவை அந்த இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

The Sun
மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், மக்கள் அந்த பகுதிக்கு வரவேண்டாம் என பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

The Sun

The Sun

The Sun