விண்ணில் வெடித்துச் சிதறிய ராட்சத சிவப்பு நட்சத்திரம்! விஞ்ஞானிகள் தகவல்
சூரியனை விட பல மடங்கு பெரிய 'ராட்சத சிவப்பு நட்சத்திரம்' ஒன்று வெடித்து சிதறி உயிரிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனின் இன்றைய அறிவியல் விண்ணை தாண்டி மேலும் சில பால்வழி அண்டங்களை கடந்துள்ளது. இதுவே இன்று வரை பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது போன்று பல வகையானவற்றை நாம் இன்று வரை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி உலக அளவில் உள்ள வானியலாளர்கள் சூரியனை விடவும் 10 மடங்கு பெரிதாக உள்ள ராட்சத சிவப்பு நட்சத்திரம் ஒன்றை கண்டறிந்தனர்.
பூமியில் இருந்து சுமார் 120 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்த அந்த நட்சத்திரம் வெடிக்க உள்ளதாகவும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
இந்த ராட்சத சிவப்பு நட்ஷத்திரத்தின் முடிவை பற்றி பல்வேறு கூறுகள் சொல்லப்படுகின்றன. அதன்படி இந்த ராட்சத சிவப்பு நட்சத்திரமானது தனது இறுதி நிலையை அடைவதை, உப்புவதன் மூலம் தெரிந்து கொண்டுள்ளனர்.
மேலும் இதன் வெடிப்பானது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகத்தின் சுற்று பாதை வரை தாக்கி உள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.
நியான் மற்றும் ஆக்சிஜென் ஆகிய வாயுக்களின் கலப்பினால் பெரும் வெடிப்பை இது ஏற்படுத்தி கொண்டது. மேலும் இதன் இறுதி கட்டத்தில் சிலிக்கான் மூலமாகவும் மாபெரும் வெடிப்பை அடைந்தது. இறுதியாக இந்த ராட்சத சிவப்பு நட்ஷத்திரம் தனது வாழ்நாளை முடித்து கொண்டது.
நாம் நினைப்பது போன்று இல்லாமல் இந்த பெரு வெடிப்பானது மிக பெரிய அளவில் இருந்துள்ளது. இந்த வெடிப்பில் ஏராளமான வாயுக்கள் வெளியாகி உள்ளது. மேலும் பால்வழி அண்டத்தில் எண்ணற்ற மாறுதல்களையும் இது ஏற்படுத்தி உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கிட்டத்தட்ட பிளாக்வோல் என்று சொல்லப்படும் அறிவியல் கூற்றுடன் இது ஒன்றியுள்ளது. இதன்மூலம் கோள்கள் அல்லது நட்சத்திரங்கள் தனது வாழ்நாளை முடித்து கொள்ள இது போன்ற பெரும் வெடிப்பை ஏற்படுத்த கூடும் என்பதை இந்த முறை மீண்டும் அறிவியல் பூர்வமாக தெரிய வந்துள்ளது.
இதை விஞ்ஞானிகள் சூப்பர்நோவா 2 என்கிற முறையில் குறிப்பிடுகின்றனர். இது போன்ற பல்வேறு பெருவெடிப்புகள் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற வெடிப்புகள் பூமிக்கு அருகில் வராத வரை மனித இனத்திற்கு எந்த பாதிப்புகளும் இல்லை. மேலும் இதை பற்றிய பல்வேறு ஆய்வுகள் தினம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இவற்றின் மூலம் எதிர் காலத்தில் இப்படியொரு ஆபத்து பூமிக்கு வந்தால், அதனை எப்படி எதிர்கொள்வது என தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக நாசா (NASA) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் பல கோடி மதிப்பில் ஏராளமான செயல்திட்டங்களை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.