பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு.. மகன் கொடுத்த வியக்க வைக்கும் பரிசு
பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.
பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான வேலைகளையும் கூட செய்து படிக்க வைக்கிறார்கள்.
அந்தவகையில் தந்தை ஒருவர் 33 வருடங்களாக பெட்டிக்கடை வைத்து தனது மகனை மருத்துவர் ஆக்கியுள்ளார்.
தந்தைக்கு மகன் அளித்த பரிசு
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் வசிக்கும் வாஹித் மூமின் என்ற மருத்துவர், தனது தந்தை 33 வருடங்களாக பெட்டிக்கடை வைத்து படிக்க வைத்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "எனது அப்பா இன்று முதல் பெட்டிக்கடையில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால், அதற்கு அவர் மனதளவில் தயாராக இல்லை. அவர், 33 வருடங்களாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
அவர் தனது கடின உழைப்பின் காரணமாகவும், பெட்டிக் கடையின் காரணமாகவும் பண நெருக்கடி இல்லாமல், கடன் வாங்காமல் என்னை மருத்துவர் ஆக்கியுள்ளார்.
2 பெருநாள் கொண்டாட்டத்திற்காக வருடத்திற்கு 2 நாட்கள் மட்டும் விடுப்பு கொடுத்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை கடையை நடத்தி வந்தார்.
எனது பெற்றோர் எனக்கு கல்வியை கொடுக்கவில்லை என்றால் நானும் பெட்டிக்கடையை தொடர்ந்திருப்பேன். அதனை நவீன முறையில் விரிவுபடுத்தியிருப்பேன்.
பெட்டிக்கடையில் இருந்து எனது அப்பா ஓய்வு பெறுவது சந்தோஷமாக இருக்கிறது. இனி அவர் நேரத்தை உற்சாகமாக செலவிடுவார். அவரது ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |