நாடுகடத்துதலை வேகப்படுத்தும் சுவிஸ் மாகாணங்களுக்கு பரிசு: நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள யோசனை
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை வேகப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ள சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடுகடத்துதலை வேகப்படுத்தும் சுவிஸ் மாகாணங்களுக்கு பரிசு கொடுக்கவேண்டும் என்னும் யோசனையையும் முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள யோசனை
சுவிஸ் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Mike Egger என்பவர், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை வேகப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், எந்த மாகாணங்கள் மற்ற மாகாணங்களைவிட வேகமாக செயல்படுகின்றனவோ, அவற்றிற்கு ரொக்கப் பரிசு வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், புலம்பெயர்தலுக்காக மாகாண செயலகமோ, சில மாகாணங்கள் நாடுகடத்துதலை வேகப்படுத்தாததன் பின்னணியில், முறையான ஆவணங்கள் இல்லாதது, மேல்முறையீடுகள் என பல காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |