மஹேல ஜெயவர்த்தனே பாராட்டிய வீரர் உலகக் கோப்பையில் வேண்டுமாம்! ஜாம்பவான் வீரர்
அதிரடி வீரரான டிம் டேவிட் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் - கில்கிறிஸ்ட்
டிம் டேவிட் 15 முதல் 20 பந்துகளை சந்தித்தாலே போதும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என கூறிய கில்கிறிஸ்ட்
அவுஸ்திரேலிய அணியில் விளையாடும் டிம் டேவிட் உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.
இந்த நிலையில் டிம் டேவிட் உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும்அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'டிம் டேவிட்டின் சக்தியும், அதை அவர் எடுத்துக் கொண்ட விதமும்.. கடந்த 18 மாதங்களாக உலகம் முழுவதும் அவரிடமிருந்து நாம் ஆட்டத்தினைப் பார்க்கும்போது, உண்மையில் எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் விளையாடியிருக்கிறார். அவர் 15 முதல் 20 பந்துகளை சந்தித்தாலே போதும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்' என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, டிம் டேவிட் சிறப்பான வீரர் என இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.