தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் இருக்க வேண்டிய அவசியமில்லை: அவுஸ்திரேலிய ஜாம்பவான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, அடுத்த ஐபிஎல் சீஸனில் விளையாட வேண்டியதில்லை என அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனியின் ஓய்வு
ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி, எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றால் கௌரவமான இடத்தைப் பிடிக்கும்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (Adam Gilchrist) CSK அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஒரு சாம்பியன்
அவர், "இந்த ஐபிஎல்லில் தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவருக்கு என்ன செய்வது என்று தெரியும். ஆனால், எதிர்காலத்திற்காக ஒருவேளை அவர் அடுத்த ஆண்டு அங்கு (ஐபிஎல்) இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் உங்களை நேசிக்கிறேன் தோனி, நீங்கள் ஒரு சாம்பியன் மற்றும் Icon" என தெரிவித்துள்ளார்.
தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஐபிஎல்லில் 273 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) 5383 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 24 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |