ஐசிசி-2025 ஒருநாள் தரவரிசை: சுப்மன் கில், மகேஷ் தீக்ஷனா புதிய சாதனை!
இந்திய வீரர் சுப்மன் கில் மற்றும் இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனா ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஐசிசி தரவரிசை
சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க நாளில் வெளியிடப்பட்ட ஐசிசியின் புதிய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், இரண்டு புதிய வீரர்கள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதில் இந்திய வீரர் சுப்மன் கில்(Shubman Gill) சிறந்த பேட்ஸ்மேனாகவும், இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனா(Maheesh Theekshana) முன்னணி பந்துவீச்சாளராகவும் உயர்ந்துள்ளனர்.
சுப்மன் கில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பாபர் அசாமை(Babar Azam) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
அதே நேரத்தில் தீக்ஷனா தனது சிறப்பான பந்துவீச்சும் திறனால் ஆப்கானிஸ்தான் வீரர் ஷீத் கானை முந்தியுள்ளார்.
சுப்மன் கில் அதிரடி ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் 3-0 தொடர் வெற்றி சுப்மன் கில்லின் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.
இந்த தொடரில் அதிகபட்சமாக 259 ஓட்டங்கள் குவித்த அவர், 86.33 சராசரியுடனும், 103.60 ஸ்டிரைக் ரேட்டுடனும் அசத்தினார்.
சுப்மன் கில் தற்போது 796 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார், அதே நேரத்தில் பாபர் அசாம் 773 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா, ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் பட்டியலில் உள்ளனர்.
பேட்டிங் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில், இலங்கை கேப்டன் சரித் அசலங்கா(Charith Asalanka) இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியதன் மூலம் எட்டு இடங்கள் முன்னேறி 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அசத்தும் மகேஷ் தீக்ஷனா
பந்து வீச்சு தரவரிசையில், இலங்கை வீரர் தீக்ஷனாவின் எழுச்சி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை(Rashid Khan) இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
தீக்ஷனா தற்போது 680 புள்ளிகளையும், ரஷீத் கான் 669 புள்ளிகளையும் கொண்டுள்ளனர்.
தீக்ஷனா மற்றும் ரஷீத் ஆகியோரைத் தொடர்ந்து நமீபியாவின் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், இந்தியாவின் குல்தீப் யாதவ் மற்றும் பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் முதல் ஐந்து பந்துவீச்சாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐந்து இடங்கள் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |