அடித்து நொறுக்கிய கில்..கொல்கத்தா நைட் ரைடர்ஸ் படுதோல்வி
ஐபிஎல் 2026 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
கேமரூன் கிரீன் 79 ஓட்டங்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
முதலில் துடுப்பாடிய கொல்கத்தா அணியில் ரஹானே (0), ரகுவன்ஷி (8) சொதப்ப, செய்பெர்ட் 19 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.
எனினும் நடப்பு தொடரில் தடுமாறி வந்த கேமரூன் கிரீன் (Cameron Green) விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குஜராத் வெற்றி
அவரது அதிரடியில் கொல்கத்தா அணி 180 ஓட்டங்கள் குவித்தது. கடைசி விக்கெட்டாக அவுட் ஆன கிரீன் 55 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் விளாசினார்.
சிறப்பாக பந்துவீசிய ரபாடா 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் அசோக் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் அதிரடியில் மிரட்டினார். அவர் 50 பந்துகளில் 86 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாச, குஜராத் அணி 19.4 ஓவர்களில் 181 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |