ஷிகர் தவானின் வாழ்நாள் சாதனையை சுக்குநூறாக்கிய ஷுப்மன் கில்! சாம்பியன்ஸ் டிராஃபியில் மிரட்டல்
இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஷுப்மன் கில் சதம்
துபாயில் நேற்று நடந்த வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷுப்மன் கில் சதம் விளாசினார்.
வங்காளதேசம் நிர்ணயித்த 229 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரரான ஷுப்மன் கில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 129 பந்துகளில் 101 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 51 இன்னிங்ஸ்களில் 8 சதம் அடுத்து, ஷிகர் தவானின் வாழ்நாள் சாதனையை முறியடித்தார்.
அதாவது, இந்திய அணி சார்பில் குறைந்த இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை தவான் 57 இன்னிங்ஸ்களில் செய்திருந்தார்.
குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக 8 சதங்கள் அடித்தவர்கள்
- ஷுப்மன் கில் (Shubman Gill) - 51 இன்னிங்ஸ்
- ஷிகர் தவான் (Shikhar Dhawan) - 57 இன்னிங்ஸ்
- விராட் கோஹ்லி (Virat Kohli) - 68 இன்னிங்ஸ்
- கவுதம் கம்பீர் (Gautam Gambhir) - 98 இன்னிங்ஸ்
- சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) - 111 இன்னிங்ஸ்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |