கோஹ்லி, ராகுலின் சாதனையில் இணைந்த கில்
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 6000 ஓட்டங்கள் கடந்த 3வது வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார்.
3வது இந்திய வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணித்தலைவர் சுப்மன் கில் 37 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் டி20-யில் 6000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை அவர் ஈட்டினார். 185 இன்னிங்ஸ்களில் இதனை எட்டியதன் மூலம், அதிவேகமாக 6000 ஓட்டங்கள் எடுத்த 3வது இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.
கே.எல்.ராகுல் 166 இன்னிங்ஸ்களிலும், விராட் கோஹ்லி 184 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லினை எட்டினர்.
ஒட்டுமொத்த அரங்கில் கிறிஸ் கெய்ல், பாபர் அஸாம், கே.எல்.ராகுல், ஷான் மார்ஷ், டெவோன் கான்வே, விராட் கோஹ்லி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சுப்மன் கில் உள்ளார்.
பாகிஸ்தானின் மொஹம்மது ரிஸ்வான், அவுஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |