இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் இந்திய அணி 608 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதிரடியில் மிரட்டிய அணித்தலைவர் சுப்மன் கில் 162 பந்துகளில் 161 ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.
கில் முதல் இன்னிங்ஸில் 269 ஓட்டங்கள் விளாசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒரே டெஸ்டில் 430 ஓட்டங்கள் குவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்த இரண்டாவது வீரர் சுப்மன் கில் ஆவார்.
அவர் மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா (400), இலங்கையின் குமார் சங்ககாரா (424), மார்க் டெய்லர் (426) ஆகியோரை முந்தினார்.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கிரஹாம் கூச் (Graham Gooch) 456 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
சுப்மன் கில் (Shubman Gill) இந்திய அணிக்கு தலைமை ஏற்றபோது பல விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் தனது துடுப்பாட்டத்தினால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |