காதலுக்கு தடையாக இருந்த மனைவி... காதலியுடன் சேர்ந்து கொலை செய்த இந்திய வம்சாவளி கணவர்
காதலுக்கு தடையாக இருந்ததால், தன் காதலியுடன் சேர்ந்து மனைவியைக் கொலை செய்த இந்திய வம்சாவளியினர் வழக்கில் இரண்டாவது முறையாக குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்திய வம்சாவளியினரான Bhupinderpal Gill (40) என்பவர், Gurpreet Ronald (37) என்னும் பெண்ணைக் காதலித்த நிலையில், திருமணத்துக்குப் பின்னும் அந்த பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார்.
தங்கள் காதலுக்கு தடையாக இருந்ததால், அந்த பெண்ணுடன் சேர்ந்து தன் மனைவியான Jagtar Gillஐ (43) கொலை செய்தார் Bhupinderpal.
Bhupinderpal மற்றும் அவருடன் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருந்த Gurpreet ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முந்தைய தீர்ப்பில் நீதிபதிகள் தவறு செய்திருப்பதாகக் கூறி, மீண்டும் விசாரணையை துவக்க வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், குற்றம் நடந்த வீட்டை ஆய்வு செய்யச் சென்ற Staff Sgt. Ugo Garneau என்னும் பொலிஸ் அதிகாரி, வீட்டில் ஆங்காங்கு சிறு இரத்தத்துளிகள் கிடப்பதைக் கவனித்துள்ளார்.
Jagtar Gillஇன் கழுத்தும், மணிக்கட்டும் அறுக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இரத்தவெள்ளமாகத்தான் இருக்கமுடியும், ஆனால், இப்படி சிறு சிறு இரத்தத்துளிகள் எப்படி வந்தன, வீட்டுக்கு வெளியே எப்படி இரத்தம் வந்தது என சந்தேகப்பட்ட அவர், அந்த இரத்த துளிகளை சேகரித்து DNA சோதனைக்கு அனுப்பியுள்ளார்.
DNA சோதனையில், அந்த இரத்தத்துளிகள் கொலை செய்யப்பட்ட Jagtar Gillக்குரியவை அல்ல, அவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள Gurpreet என்ற பெண்ணுடையவை என்பது தெரியவந்துள்ளது.
Bhupinderpal தன் மனைவியை தனியாக விடுவதற்காக குழந்தைகளை வெளியே அழைத்துக்கொண்டு செல்ல, அப்போது வீட்டுக்கு வந்த Ronald, Jagtar Gillஐக் கொலை செய்ததாக வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆக, இரண்டாவது முறை நடத்தப்பட்ட வழக்கு விசாரணையிலும் Bhupinderpal மற்றும் Gurpreet இருவரும் குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது.
தங்கள் காதலுக்கு தடையாக இருந்த Jagtar Gillஐ Gurpreet 25 முறை கத்தியால் குத்திக்கொலை செய்ததாகவும், Bhupinderpal கொலைக்கும், தப்புவதற்கும் திட்டமிட்டதாகவும் உதவியதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, Bhupinderpal மற்றும் Gurpreet இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளது, 25 ஆண்டுகளுக்கு அவர்களால் ஜாமீனில் வரவும் இயலாது. வழக்கில் அதிகாரப்பூர்வ தீர்ப்பு இந்த ஆண்டின் கடைசி வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.