89 ரன்னில் சுருண்டு மரண அடி வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்..சுப்மன் கில் கூறிய காரணம்
ஐபிஎல் 2024யின் 32வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
89 ஓட்டங்களுக்கு சுருண்ட குஜராத் டைட்டன்ஸ்
அகமதாபத்தில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் மற்றும் ஸ்டப்ஸின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ரஷீத் கான் (31) மட்டும் ஒருபுறம் போராட ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்ததால் குஜராத் அணி 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
I.C.Y.M.I
— IndianPremierLeague (@IPL) April 17, 2024
?? ? ????? ⚡️
Quick Hands from Rishabh Pant helps Tristan Stubbs join the wicket taking party ?
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #GTvDC pic.twitter.com/k8o8VPY2dk
சுப்மன் கில்
பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜேக் பிரேசர் 20 (10) ஓட்டங்களும், ஷாய் ஹோப் 19 (10) ஓட்டங்களும் எடுத்தனர்.
தோல்வி குறித்து பேசிய சுப்மன் கில், ''எங்களின் துடுப்பாட்டம் மிகவும் சராசரியாக இருந்தது, மேலும் வலுவாக திரும்பி வருவது முக்கியம். விக்கெட் சரியாக இருந்தது, சில Dismissalsகளைப் பார்த்தால், அதற்கும் ஆடுகளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மோசமான ஷாட் தேர்வு என்று நான் கூறுவேன்.
எதிரணி 89 ஓட்டங்களை துரத்தும்போது, யாராவது இரட்டை ஹாட்ரிக் எடுத்தால் தவிர, எதிரணி எப்போதும் ஆட்டத்தில் இருக்கும். இது எங்களுக்கு சீஸனின் பாதி குறிதான், நாங்கள் 3 வெற்றி பெற்றுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே அடுத்த 7யில் இருந்து 5-6 என்ற கணக்கில் வெல்வோம்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |