சுவிஸ் ஏரியில் கிடைத்த 800 கிலோ இரும்புப் பந்து: ஒரு சுவாரஸ்ய தகவல்
சுவிஸ் ஏரி ஒன்றில், ஏரியின் அடியில் ஒரு பெரிய இரும்புப் பந்து கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளார் ஒருவர்.
ஏரியில் கிடைத்த 800 கிலோ இரும்புப் பந்து
சுவிட்சர்லாந்தில் Thurgau மாகாணத்தில் அமைந்துள்ள Constance ஏரியில், ரோபோ ஒன்றின் உதவியுடன் ஏதாவது பொருட்கள் கிடக்கிறதா என தேடிக்கொண்டிருந்த ஒரு நபர், ஏரிக்கடியில் ஒரு பெரிய இரும்புப் பந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
[D8DMEQ
அது குறித்து அவர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, அந்த பந்து மீட்கப்பட்டுள்ளது. விடயம் என்னவென்றால், அது மதுபானம் ஒன்று நிரப்பப்பட்ட இரும்புப் பந்து ஆகும். அதாவது, 2022ஆம் ஆண்டு, மதுபானம் தயாரிக்கும் ஒரு நிறுவனம், ஒரு குறிப்பிட்ட சுவையை அந்த மதுபானத்துக்குக் கொடுப்பதற்காக, அதை ஒரு பெரிய இரும்புப் பந்துக்குள் அடைத்து, அதை Constance ஏரிக்குள் போட்டுவைத்துள்ளது.

100 நாட்களில் அந்த இரும்புப் பந்து மீட்கப்படவேண்டிய நிலையில், அந்நிறுவனம் மீண்டும் அதை மீட்க முயலும்போது அந்த பந்து மாயமாகியுள்ளது.
ஆகவே, அந்தப் பந்து திருட்டுப் போய்விட்டதாக கருதி, அந்நிறுவனம் பொலிசில் புகார் செய்துள்ளது.
இந்நிலையில், தற்செயலாக நேற்று அந்த பந்து அந்த நபருக்கு கிடைத்துள்ளது.
அந்த பந்துக்குள் 230 லிற்றர் மதுபானம் உள்ளது. அந்த மதுபானத்தின் விலை, ஒரு போத்தல் 99 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்.
தற்போது அந்தப் பந்து அந்த மதுபான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கண்டுபிடித்த தனக்கு அந்நிறுவனம் சன்மானம் எதுவும் தருமா என்பது தனக்குத் தெரியவில்லை என்கிறார் அந்தப் பந்தைக் கண்டுபிடித்தவர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |