வீடே மணக்கும் இஞ்சி பிஸ்கட்: இப்படியும் செய்யலாமா?
பொதுவாகவே பலரும் பிஸ்கட்-டுக்கு அடிமையாக தான் இருப்போம், பசியெடுத்தால் போதும் உடனே பிஸ்கட் சாப்பிட வேண்டும் என்று நினைத்துவிடுவோம்.
கடைகளில் கிடைக்கும் பிஸ்கட்-களில் இரசாயன பொருட்கள் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கலாம், அதற்கு மாறாக வீட்டிலேயே எளிய முறையில் எந்தவொரு இரசாயன பொருட்களும் இல்லாமல் சுவையான இஞ்சி பிஸ்கட் செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
250 கிராம் - கோதுமை மா
- 100 கிராம் - பட்டர்
-
75 கிராம் - பிறவுண் சீனி
- 1 மேசை கரண்டி- துருவிய இஞ்சி
- 1 1/2 மேசை கரண்டி - காய்ந்த இஞ்சித்தூள்
-
1 - முட்டை
-
1 தேக்கரண்டி - அப்பச்சோடா
- 2 மேசைகரண்டி- பாணி
- இரண்டு சிட்டிகை உப்பு
பாணி செய்யும் முறை
சீனி, தண்ணீர் மற்றும் எலுமிச்சைத் துண்டு போட்டு கரமல் பண்ணி காய்ச்சிய சீனிப் பாணியாகும். இதை வீட்டிலேயே தயாரித்து எடுத்துக்கொள்ளலாம்.
பிஸ்கட் செய்முறை
பட்டர் மற்றும் சீனியை கிறீம் பதத்திற்கு வரும் வரை பீட்டரில் அடித்துக்கொள்ளவும், பின் ஒரு முட்டை சிறிது உப்பு சேர்த்து அதனுடன் அடிக்கவும்.
அடுத்ததாக கோதுமை மா, அப்பச்சோடா மற்றும் இஞ்சித்தூள் என்பவற்றை அடித்து எடுக்கவும்.
பின் முதலில் அடித்து வைத்த பட்டர் கலவையுடன் மாக்கலவையை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
அடுத்து தயாரித்து வைத்த பாணியை இந்த கலவையுடன் கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக சிறிய துண்டுகளாக உருட்டி பிடித்த வடிவத்தில் செய்து, பட்டர் பூசிய பேக்கிங் பேப்பர் உள்ள தட்டில் அடுக்கவும்.
தட்டில் அடுக்கிய பிஸ்கற்களை 180C சூடான Ovenஇல் வைத்து 10-15 நிமிடங்கள் பேக்பண்ணி எடுத்தால் சுவையான இஞ்சி பிஸ்கட் ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |