அரை கப் இஞ்சி இருந்தால் போதும்; சுவையான சட்னி தயார்!
சட்னி ஒரு பிரபலமான தென்னிந்திய உணவாகும். இது பெரும்பாலும் காலை உணவின் போது இட்லி, தோசை, பணியாரம், மசாலா தோசை, பொங்கல் மற்றும் வடை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது.
அந்தவகையில் இஞ்சி வைத்து எப்படி சுவையான சட்னி செய்யலாம் எஎன்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- இஞ்சி - 1/2 கப் நறுக்கியது
- வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
- பச்சை மிளகாய் - 6
- காய்ந்த மிளகாய் - 6
- புளி - 2 துண்டு
- துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி இலை - 1/2 கப்
- உப்பு - 1 தேக்கரண்டி
- தண்ணீர்
- வெல்லம் - 1 துண்டு
தாளிப்பு செய்ய
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 1
- பெருங்காய தூள் - 1 சிட்டிகை
- கறிவேப்பில்லை
செய்முறை
1. கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
3. இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.
4. ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
5. முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
6. தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
7. தாளித்த பொருட்களை சட்னி மேல் ஊற்றி எடுத்தால் சுவையான இஞ்சி சட்னி தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |