உடல் ஆரோக்கியத்திற்கு பாரம்பரியமான இஞ்சி சட்னி.., எப்படி செய்வது?
Ginger chutney Recipe- இஞ்சி என்பது சமையலிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காரமான, நறுமணமுள்ள வேர்த்தண்டுக்கிழங்கு ஆகும்.
இஞ்சியில் கலோரிகள் மற்றும் கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளன. மேலும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன.
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் போன்ற சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தவும், குமட்டலைக் குறைக்கவும், உடல் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
அந்தவகையில் ஆரோக்கியம் நிறைந்த இஞ்சியில் சத்தான சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- உளுந்து- 4 ஸ்பூன்
- கொத்தமல்லி விதை- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 6
- புளி- சிறிதளவு
- இஞ்சி- 3 சிறிய துண்டு
- மாங்காய்- ½
- புதினா- 1 கைப்பிடி
- கல் உப்பு- 1 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- வெல்லம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், புளி, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய மாங்காய், புதினா சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

பின் இதனை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கல் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னி சேர்த்து கிளறவும்.
இறுதியாக வாணலில் சட்னி ஒட்டாமல் கெட்டியாக வந்ததும் அடுப்பை அனைத்து எடுத்தால் சுவையான இஞ்சி சட்னி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |